May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

ராமநவமி அன்று ராமரை வணங்கினால் துன்பம் விலகும்

1 min read

Worshiping Lord Rama on Ramnavami will remove all suffering

28/3/2023
மகாவிஷ்ணு ஒவ்வொரு அவதாரமும் ஒவ்வொரு குறிக்கோளுக்காக எடுத்த்துள்ளார். அ்நத வகையில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை நிலைநாட்டவும் பெண்ணாசை கூடாது என்பதை எடுத்துக்காட்டவும் ராமராக அவதாரம் எடுத்தார்.
அயோத்தியில் ராமர் பிறந்த நாள்தான் ராமநவமி. அதாவது அவர் பங்குனி மாதம் வளர்பிறை நவமி அன்று தசரதருக்கும் கோசலைக்கும் மகனாக பிறந்தார்.
அயோத்தியை ஆண்ட மன்னர் தான் தசரத மன்னனுக்கு கோசலை, சுமித்திரை, கைகேயி என்ற மூன்று மனைவிகள் இருந்தார்கள். ஆனால் வாரிசாக தசரத சக்கரவர்த்திக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இதற்காக வசிஷ்ட முனிவரிடம் சென்று, குழந்தை பாக்கியம் பெற என்ன செய்யலாம் என்ற கேட்டார். அவர் சொன்ன ஆலோசனை படி தன்னுடைய அரண்மனையில் ‘புத்ர காமேஷ்டி’ யாகத்தை நடத்த தசரதர் முடிவு செய்தார். யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது யாகத் தீயிலிருந்து யக்னேஸ்வரர் தோன்றி, பாயாசம் நிறைந்த ஒரு குடுவையை தசரத மன்னனிடம் கொடுத்து அதை அவரது மனைவி மார்களுக்கு கொடுக்கும்படி கூறினார். சக்கரவர்த்தியின் கையில் கொடுத்தார். அந்த பாயாசத்தை தசரதர் தன் மனைவிகளும் கொடுத்து அருந்த சொன்னார் .அதை மூன்று மனைவியரும் சாப்பிட்டார்கள். அதில் சுமித்திரை மட்டும் இரண்டு முறை பாயாசத்தை சாப்பிட்டார். அதன்பயனாக கோசலை ராமபிரானை பெற்றெடுத்தார்கள். கைகேயிக்கு பரதன் பிறந்தார். சுமித்திரை இரண்டு முறை சாப்பிட்டதால் லட்சுமணனும், சத்ருக்கனனும் மகனாக பிறந்தார்கள். அவர்கள் பிறந்த நாள்தான் ராமநவமி.

ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு ராம அவதாரம் எடுத்து வாழ்ந்து காட்டினார். ராமாயணம் என்றால் ராமர் காட்டிய பாதை. அயனம் என்றால் பாதை என்று அர்த்தம். வாழ்க்கைப் பாதையைக் காட்டிய ராமரின் சரிதம் ராமாயணம்.
சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று ராமர் அவதரித்தார் என்ற கருத்தும் நிலவுகிறது.
ஜனக மன்னனி்ல் வில்லை உடைத்து சீதையை ராமர் மணந்தார்.
கைகேயி, கூனியின் தூபத்தால் கணவரிடம் இரண்டு வரங்கள் கேட்டார். அதில் ஒன்று தன் மகன் பரதனுக்கு பட்டாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது. இன்னொன்று ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும் என்பதாகும். இதைக்கேட்டதும் ராமர் மனைவி சீதையுடனும், தம்பி லட்சுமணனுடனும் வனவாசம் புறப்பட்டார். மகன் பிரிந்த வேதனையில் தசரதர் மாண்டர். வனவாச காலகட்டத்தில், மனைவி சீதையையும் பிரிந்தார். ஏகபத்தினி விரதனாக இருந்த ராமபிரானின் வாழ்க்கை, மனிதர்களுக்கு பல அரிய வாழ்க்கை முறைகளை போதிக்கிறது.

வழிபாடு

ராமநவமி நாளில் துளசி அர்ச்சனை செய்து வழிபடுவது பல உன்னதங்களையும் விசேஷங்களையும் தந்தருளும். பூஜையறையில் அமர்ந்து, ’ராமராம’ என்று அவனுடைய திருநாமங்களைச் சொல்லி, பிரார்த்தனை செய்யலாம்.
ராமநாமங்களைச் சொல்லச் சொல்ல, உங்கள் இல்லத்திலும் உலகத்திலும் பல நல்ல நல்ல விஷயங்களை நடத்தித் தந்தருள்வார் ராமபிரான். ஸ்ரீராமஜெயம் என்றும் ஜபிக்கலாம்!

ராமபிரானை வழிபடுவதால் எத்தனை துன்பம் வந்தபோதும் கலங்காத மனதைப் பெறலாம். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். எடுத்த செயல்களில் வெற்றி கிடைக்கும்.

மந்திரம்

ஸ்ரீராமராமராமேதி ரமே ராமே மனோரமே |
ஸஹஸ்ரநாம தத்துல்யம்ராமநாம வரானனே ||

என்ற மந்திரத்தை மூன்று தடவை கூறினால் விஷ்ணு சகஸ்ரநாமம் முழுவதும் சொன்ன பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.