May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

கிரசர் மண் கடத்தல் பற்றி தெரியாது என்ற அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும்-ரவிஅருணன் ஆவேசம்

1 min read

Ravi Arunan is furious that the minister should resign because he does not know about soil smuggling

31.3.2023
கிரசர் மண் கடத்தல் பற்றி தெரியாத நிலையில் உள்ள அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் கூறினார்.

கடையம் பகுதியில் இருந்து தினமும் லாரிகளில் கிரசர் பொடி மற்றும் கல் போன்ற கனிமங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதில் முறைகேடு நடப்பதாகவும், விதிமுறையை மீறி கனிம பொருட்கள் கடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. மேலும் கல் குவாரிகளால் இயற்கை வளம் பாதிக்கப்படுவதாகவும் நிலத்தடி நீர் குறைவதாகம் கூறப்படுகிறது. எனவே இந்த பகுதியல் உள்ள குவாரிகளை முடவேண்டும் என்று இயற்கை வள பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்து வருகிறது. இது தொடர்பான கீழக்கடையம் ஊராட்சி தலைவர் பூமிநாத் தலைமையில் இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் த*லைமையில் புளியரை பகுதியல் பல முறை மறியல் போராட்டம் நடந்தது.
இந்த நிலையில் நேற்று கனிம கொள்ளையை கண்டித்து
கடையம் சின்னத்தேர் திடலில் இயற்கை பாதுகாப்பு சங்கம் மற்றும் பல்வேறு கட்சிகள் சார்பாக ஆர்பாட்டம் நடந்தது. இயற்கை பாதுகாப்பு சங்க தலைவரும், முன்னாள் எம்.எல்.வுமான ரவி அருணன் தலைமை தாங்கினார். கடையம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன், இயற்கை பாதுகாப்பு செயலாளர் ஜமின், ஊராட்சி மன்ற தலைவர்கள் ரவண சமுத்திரம் முகம்மது உசேன், ஏ.பி.நாடானூர் அழகுதுரை, தெற்கு மடத்தூர் பிரேமராதா ஜெயம், தெற்கு கடையம் ராமலட்சுமி, பொட்டல் புதூர் கணேசன், மடத்தூர் முத்தமிழ் செல்வி ரஞ்சித், மந்தியூர் கல்யாணசுந்தரம், ஐந்தாங்கட்டளை முப்புடாதி பெரியசாமி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். இதில் கடையம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து எராளமானோர் கலந்து கொண்டனா. அவர்கள் கனிம கொள்ளைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தின்போது முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் மிக ஆவேசமாக பேசினார். இந்த பகுதியில் கனிம வளம் சுரண்டப்படுவதால் இயற்கை வளம் பாதிக்கப்படுவதாகவும், நலங்கள் கிணறுகள் பாதிக்கப்படுவதாகவும் கூறினார். மேலும் கேரளாவுக்கு புளியரை, நாகாகோவில், கோவை, தேனி ஆகிய பகுதிகள் வழியாக கடத்தப்படுவதாக தெரிவித்தார். 3 யூனிட் கிரசருக்கு அனுமதி பெற்றுவிட்டு 15 யூனிட் கொண்டு செல்வதாகவும் இதனால் அரசுக்கு பெரும் இழப்பு வருவதாகவும் சுட்டிக்காட்டினார். இதுபற்றி சட்டசபையில் கேள்வி எழுப்பும்போது நீர்வளத்துறை அமைச்சர் இதுபற்றி தெரியாது என்கிறார். முறைகேடாக கடத்துகிறார்கள் என்றால் அந்த பகுதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யுங்கள் என்கிறார். இப்படி தெரியா அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் ரவிஅருணன் பேசினார்.

இந்த போராட்டத்திற்கான ஏற்பாடுகளை கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவரும் இயற்கை வளம் பாதுகாப்பு சங்க தலைவர் பூமிநாத் செய்திருந்தார். நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கவேல், முல்லைநில விவசாய கட்சி நிறுவனத் தலைவர் கரும்புலி கண்ணன், நாம் தமிழர் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் தினகரன், நாம் தமிழர் கட்சி ஆலங்குளம் தொகுதி செயலாளர் முத்தரசு ஈசாக், கடையம் ஒன்றிய செயலாளர் கோபால் உள்பட பலர் பேசினார்கள்.
இதில் ஆழ்வார்குறிச்சி மன்ற துணைத் தலைவர் சங்கர், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அருவேல்ராஜ், முருகேசன், தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் ராஜசேகர், மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், ம.தி.மு.க. மதியழகன், பொதிகை மலை பாதுகாப்பு இயக்க செயலாளர் கஜேந்திரன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆதிமூலம், சீதாலட்சுமி, சங்கீதா ஈசாக், அ.தி.மு.க. இளம் பாசறை வக்கீல் தமிழ்மணியன், பாரதிய ஜனதா வக்கீல் கார்த்திகேயன், அ.தி.மு.க மாரியப்பன், தெற்கு கடையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலிங்கம், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புளிகணேசன், பா.ஜனதா காமராஜ், காங்கிரஸ் கவுன்சிலர் மாரிக்குமார், சமத்துவ மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் பெரியசாமி, தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் உள்பட பல்வேறு கட்சிகள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கடையடைப்பு

கனிம வள கடத்தலை கண்டித்து கடையம் பொட்டல்புதூர் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இதே கோரிக்கையை வலியுறுத்தி தென்காசியில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.