புளியரை அருகே குட்டி யானை திடீர் சாவு
1 min read
A baby elephant died suddenly near Puliarai
8/4/2023
புளியரை அருகே குட்டி யானை திடீர் இறந்தது.
குட்டி யானை
தமிழக -கேரள எல்லை யில் தென்காசி மாவட்டம் புளிய ரையை அடுத்த அலிமுக்-அச்சன்கோவில் சாலையில் வளையம் பகுதியில் நேற்று முன்தினம் யானை கூட்டம் ஒன்று சென்றுள்ளது. இதில் ஒன்றரை வயது குட்டி யானையும் இருந்துள்ளது.
நேற்று காலை அந்த சாலையில் சென்றவர்கள் பார்த்தபோது யானை குட்டி இறந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து உடனடியாக மண்ணறைப்பாறை வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த வனத்துறை யினர் அங்கு விரைந்து வந்தனர். ஆனால் யானைகள் அங்கேயே நின்றதால் வனத்துறையினர் காத்திருந்தனர். பின்னர் யானைகள் வனத்திற்குள் திரும்பி சென்றது.
இதைத்தொடர்ந்து கோனி உதவி கால்நடை அதிகாரி சந்திரன் தலைமையில் யானையின் உடல் அங்கேயே உடற்கூறாய்வு செய்யப்பட்டது. வனவிலங்கு களுக்கு நோய் தொற்று அபாயம் இருப்பதால் குட்டி யானையின் உடல் புதைக்கப்படாமல் தீ வைத்து எரிக்கப்பட்டது. தற்போது பள்ளிக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் கோடை காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் அச்சங்கோவில் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
குட்டி யானை உயிரிழந்த நிலையில் யானை கூட்டம் அங்கேயே சுற்றி வருவதால் வனப்பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் என கேரள போலீசார் மற்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.