வியாழக்கிழமை சூரிய கிரகணம்-இந்தியாவில் தெரியாது
1 min readSolar eclipse on Thursday-not known in India
19.4.2023
இன்று சூரியகிரகணம் நிகழ்கிறது, ஆனால் அது இந்தியாவில் தெரியாது.
கிரகணம்
இந்த சுபகிருது ஆண்டில் ஒரு சந்திரகிரகணம், 3 சூரிய கிரகணங்களும் என மொத்தம் 4 கிரகணங்கள் நிகழும். இதில் ஒரு சந்திர கிரகணமும் ஒரு சூரிய கிரகணமும் இந்தியாவில் தெரியும்.
சித்திரை மாதம் 7-ந் தேதி 20-4-2023 அன்று வியாழக்கிழமை அஸ்வினி நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்த கிரகணம் காலை 7.04 மணி முதல் பகல் 12.29 மணி வரை நிகழும். ஆனாலும் இந்தியாவில் இது தெரியாது.
புரட்டாசி 27ந் தேதி 14.10.2023 சனிக்கிழமை, சித்திரை நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. காலை 8&34 மணி பகல் 12-25 மணி வரை நிகழும். இதுவும் இநதியாவில் தெரியாது.
ஐப்பசி மாதம் 11-ந் தேதி 28-10-2023 சனிக்கிழமை அஸ்வினி நட்சத்திரம் 4ம் பாதத்தில்( மேஷ ராசி), சிம்ம லக்னத்தில் ராகு கிரஸ்தத்தில் சந்திர கிரகணம் நிகழ்கிறது-. அன்று நள்றிரரவு 1.05 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகிறது. கிரகணத்தின் மத்திம காலம் 1.44 மணி. நள்ளிரவு 2.23 மணிக்கு கிரகணம் முடிவடையும்.
அன்றைய தினம் அஸ்வினி, பரணி, மகம், மூலம், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்.
பங்குனி மாதம் 26-ந் தேதி 8-4-2024 அன்று திங்கட் கிழமை ரேவதி நட்சத்திரத்தில் சூரியகிரகணம் ஏற்படும். இது இந்தியாவில் தெரியாது.
சந்திரகிரகணத்தின் பலன்கள்
ஐப்பசி மாதம் 11&ந் தேதி 28&10&2023 சனிக்கிழமை நிகழும் சந்திர கிரகணத்திற்கு அஸ்வினி, பரணி, மகம், மூலம், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும். பொதுவாக அன்றைய தினம் 10 மணிக்குள் சாப்பாட்டை முடித்துவிட வேண்டும்.
கிரகணம் முடிந்த பின் குளிப்பது நல்லது. அப்படி குளிக்கும்போது
இந்த்ரோ அநலோ யமோ ரி«-க்ஷ£ வருணோ
வாயு ரேவச குபேர ஈசோக்நந்து இந்து
உபராக உத்தவ்யதாம் மம றீறீ
என்ற மந்திரத்தை ஒரு தகடிலோ, பேப்பரிலே எழுதி அதை கையில் கட்டிக்கொண்டு குளிக்க வேண்டும்
கர்ப்பிணி பெண்கள் சனிக்கிழமை நள்ளிரவு 1 மணி முதல் 2.30 மணி வரை சந்திரனை பார்க்ககூடாது. மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு கோவில், வீடு போன்றவற்றை சுத்தம் செய்து அவரவர் சம்பிரதாயபடி பூஜை செய்ய வேண்டும்.