இந்தியாவில் ஒரே நாளில் 10,112 பேருக்கு கொரோனா உறுதி
1 min read
In India, 10,112 people were diagnosed with corona virus in a single day
23.4.2023
இந்தியாவில் ஒரே நாளில் 10,112 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் நேற்று 12,193 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று 10,112 ஆக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,48,81,877-லிருந்து 4,48,91,989 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 67,556 லிருந்து 67,806 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,31,300-லிருந்து 5,31,329 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 10,765 பேர் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இன்று 9,833 பேர் வீடு திரும்பியுள்ளனர்.