மத்திய பிரதேசத்தில் மேம்பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி
1 min read
15 killed as bus overturns from flyover in Madhya Pradesh
9.5.2023
மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் மேம்பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15 பேர் பலியனாாகள்.
விபத்து
மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் மேம்பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தூருக்கு சென்று கொண்டிருந்த இந்த பேருந்து, டோங்கர்கான் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், சிறு காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 நிதியுதவி அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.