June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் 80 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றம்

1 min read

80 resolutions passed unanimously in Keezhapaur municipal council meeting

13.5.2023
தென்காசி மாவட்டம் , கீழப்பாவூர் பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் 12.05.2023 அன்று காலை 11.00 மணிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் பிஎம்எஸ்.ராஜன் தலைமையிலும் , பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் கே. ராஜசேகர், கீழப்பாவூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜா.மாணிக்கராஜ் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது .
மேற்படி கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் வி.ராதா விநாயகப் பெருமாள் , செ.கோடிஸ்வரன் , மு.மாலதி முருகேசன் , கு.ஜெயசித்ரா குத்தாலிங்கம் , மு.கனகபொன்சேகா முருகன் , க.இசக்கிராஜ் , சி.அன்பழகு சின்னராஜா , ஜா.ஜேஸ்மின் யோவான் , ரா.விஜி ராஜன் , மா . இசக்கிமுத்து , சு.பவானிஇலக்குமண தங்கம் , தா.தேவஅன்பு , த.வெண்ணிலா தங்கச்சாமி , ம.சாமுவேல்துரைராஜ் , சீ.பொன்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர் .

மேற்படி பேரூராட்சி மன்ற கூட்டத்தில் கீழப்பாவூர் பேரூராட்சி பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் திட்டம் , பொதுசுகாதார பராமரிப்பு , தெருவிளக்கு அமைத்தல் , சாலை வசதிகள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் போன்ற அத்தியாவசிய பணிகள் குறித்த 80 தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டு பேரூராட்சி மன்ற அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடு அனைத்து தீர்மானங் களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது . கூட்ட முடிவில் கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் கே.ராஜசேகர் , அனைவருக்கும் நன்றி கூறினார்.
-முத்துசாமி, நிருபர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.