June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட விளையாட்டு விடுதி மாணவர்கள் சேர்க்கை

1 min read

Tenkasi District Sports Hostel Students Admission

17.5.2023
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2023-2024 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விடுதி மாணவ, மாணவியர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.

இதுபற்றி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை இரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தென்காசி மாவட்டம் சார்பாக 2023-2024ஆம் ஆண்டிற்கான பள்ளி மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு விடுதி சேர்க்கைக்காக விளையாட்டு விடுதி தேர்வு நடத்தப்பட உள்ளது . 6 ம் வகுப்பு . 7 ஆம் வகுப்பு , 8 ஆம் வகுப்பு : 9 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பிற்கு விளையாட்டு விடுதி சேர்க்கையும் . முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற 6.ஆம் வகுப்பு , 7 ஆம் வகுப்பு மற்றும் B. ஆம் ஆகிய வகுப்புகளுக்கு முதன்மை நிலை விளையாட்டு மையத்திற்கான விளையாட்டு விடுதி தேர்வு நடைபெற உள்ளது . விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவமாணவியர்கள் , விளையாட்டு விடுதி , முதன்மை நிலை விளையாட்டு மையங்களின் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தினை 18.052023 முதல் Www.sdattn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் .

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 23.05.2023 அன்று மாலை 5.00 மணி ஆகும் . ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் பிற வழிகளில் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது . மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் 24.052023 அன்று காலை 7.00 மணியளவில் ஆலங்குளம் தாலூகா , சிவலார்குளம் , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் , மினி விளையாட்டரங்கில் நடத்தப்பட உள்ளதால் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த பள்ளி மாணவ மாணவியர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் , மேலும் தகவல்களுக்கு 04633 212580 மற்றும் 9786318406 என்ற எண்ணை அலுவகை நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் . இவ்வாறு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை இரவிச்சந்திரன் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் ,

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.