June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் ஜூன் 9 ல் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்-மு.க.கனிமொழி எம்.பி பங்கேற்பு

1 min read

Karunanidhi Centenary Celebration Public Meeting on 9th June at Kadayam-M.K.Kanimozhi MP Participation

22.3.2023
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கடையம் சார்பதிவாளர் அலுவலகம் அருகே ஜுன் 9 நடைபெறும் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் மு.க.கனிமொழி எம்.பி. பங்கேற்று, 3 ஆயிரம் பேர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.

கனிமொழி

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கடையம் சார்பதிவாளர் அலுவகம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் வருகிற ஜுன் 9ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் தலைமை வகிக்கிறார். திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி பங்கேற்று,
3 ஆயிரம் பேர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.

இந்த பொதுக்கூட்டத்திற்கான அழைப்பிதழ்களை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ. சிவபத்மநாதன், தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி.யை நேரில் சந்தித்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ.ஜெயக்குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.