May 10, 2024

Seithi Saral

Tamil News Channel

புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு- தகவல் துளிகள்

1 min read

New Parliament Building Inauguration – Information Drops

28.5.2023
மிர்சாபூர் கம்பளம், நாகபுரி தேக்கு, திரிபுரா மூங்கில், ராஜஸ்தான் கல் சிற்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அசோகர் சின்னத்துக்கான பொருட்கள் ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் இருந்து பெறப்பட்டன. புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா இன்று நடந்தது. அதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு:-

  • புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் மொத்த மதிப்பீடு ரூ.1250 கோடி.
  • குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த எச்.பி.சி. நிறுவனத்தை சேர்ந்த பிமல் படேல் என்பவர் இந்த பாராளுமன்ற கட்டிடத்துக்கான வடிவமைப்பை செய்து கொடுத்து உள்ளார்.
  • டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டி உள்ளது.
  • 4 மாடிகளுடன் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.
  • பாராளுமன்ற மக்களவையில் ஒரு மேஜையின் முன் உள்ள இருக்கைகளில் 2 எம்.பி.க்கள் அமர முடியும்.
  • எம்.பி.க்கள் தங்களின் முன்பு உள்ள டிஜிட்டல் தொடுதிரை மூலம் பார்த்து வாசிக்கலாம்.
    தேவையான வற்றை சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
  • அரசியல் சாசன காட்சியகம், கூட்டரங்கம், 6 கமிட்டி அறைகளுக்கான 92 அறைகள் இடம்பெற்று உள்ளன.
  • ஆடியோ, வீடியோ சார்ந்த உபகரணங்கள் மேம்பட்டதாக உள்ளன.
  • அலுவலக அறையில் மத்திய மந்திரிகளுக்காக 92 அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
  • மின்சக்தி பயன்பாடு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சில அம்சங்கள் உள்ளன.
  • மழைநீர் சேகரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது.
  • ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி செய்து மறுபடியும் பயன்படுத்தும் அம்சங்களும் உள்ளன.
  • மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள், அதிகாரிகள் இளைப்பாறுவதற்காக இளைப்பாறும் அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இது உணவோடு சேர்ந்து உரையாடக்கூடிய இடமாக உள்ளது.
  • பசுமை நாடாளுமன்றம் என்ற முயற்சியும் எடுக்கப்பட்டுள்ளது.
  • 23 லட்சத்து 4 ஆயிரத்து 95 மனித வேலை நாட்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
  • இந்த கட்டிடத்தின் ஆயுள் காலம் 150 ஆண்டுகள்.
  • கட்டிடக் கலையில் இந்தியாவின் அனைத்து மாநில அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.
  • 75 ரூபாய் நாணயம் மற்றும் தபால்தலை வெளியிடப்பட்டது.
  • மக்களவையில் 888 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்கள் என மொத்தம் 1272 எம்.பி.க்கள் அமர முடியும்.
  • மிர்சாபூர் கம்பளம், நாகபுரி தேக்கு, திரிபுரா மூங்கில், ராஜஸ்தான் கல் சிற்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. * சிவப்பு-வெள்ளை மார்பிள் ராஜஸ்தானில் இருந்தும், கேஷரியா பச்சை நிற கற்கள் உதய்பூரில் இருந்தும், சிவப்பு நிற கிரானைட் கற்கள் அஜ்மீரில் இருந்தும், வெள்ளை நிற மார்பிள் கற்கள் ராஜஸ்தானில் இருந்தும், ஜல்லிக் கற்கள் உத்தரபிரதேசம், ராஜஸ்தானில் இருந்தும் கொண்டு வரப்பட்டுள்ளன.
  • மேற்கூரைக்கான எக்கு டாமன் டையூவில் இருந்து வரவழைக்கப்பட்டது.
  • பித்தளை வேலைகள் குஜராத்திலும், மேசை, இருக்கைகள் செய்யும் பணி மும்பையிலும் நடந்தது. * அசோகர் சின்னத்துக்கான பொருட்கள் ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் இருந்து பெறப்பட்டன.
  • அரியானாவில் தயாரிக் கப்பட்ட எம்-சானட் மணல் கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்பட்டது. சிமெண்ட் கற்கள் அரியானா, உத்தர பிரதேசத்தில் இருந்து வர வழைக்கப்பட்டன.
  • 2020 டிசம்பர் 10-ந் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் 2½ ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளது.
  • மக்களவை மயில் வடிவத்திலும், மாநிலங்களவை தாமரை வடிவத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.
  • செங்கோல் நிறுவிய நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து திருவாவடுதுறை உள்ளிட்ட 20 ஆதீனங்கள் பங்கேற்றனர்.
  • செங்கோலை பூஜையில் வைத்து பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் வழிபட்டனர்.
  • மத்திய மந்திரிகள், மாநில முதல்-மந்திரிகள், எம்.பி.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
  • பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
  • வந்தே மாதரம் பாடலை நாதஸ்வரத்தில் இசைத்த கலைஞர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறினார்.
  • திருவாவடுதுறை, தருமபுரி, மதுரை உள்ளிட்ட 20 ஆதீனங்களிடம் பிரதமர் மோடி தனித்தனியாக ஆசி பெற்றார்.
  • பாராளுமன்ற திறப்பையொட்டி இஸ்லாம், கிறிஸ்தவம், பவுத்தம் உள்ளிட்ட அனைத்து மத பிரார்த்தனை நடந்தது. இதில் சங்கராச்சாரியார்கள், பாதிரியார்கள், மதகுருமார்கள் பங்கேற்றனர்.
  • பாராளுமன்ற கட்டுமான பணியில் ஈடுபட்ட கட்டுமான பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பிரதமர் மோடி கவுரவித்தார்.
  • செங்கோலை உருவாக்கிய உம்மிடி ஜுவல்லர்ஸ் அதிபர்களையும் பிரதமர் மோடி கவுரவித்தார்.
  • புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கான கல்வெட்டை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
  • சபாநாயகர் இருக்கைக்கு அருகில் கண்ணாடிபெட்டிக் குள் சோழர் காலத்து செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார். அதன்பிறகு குத்துவிளக்கு ஏற்றினார்.
  • அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே என்னும் தேவார பாடல் ஒலிக்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.