பாலியல் புகாரில் பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யாததையும் வைரமுத்து மீதான புகாரையும் ஒப்பிட்ட அண்ணாமலை
1 min readAnnamalai compared the non-arrest of Brij Bhushan Singh in the sexual complaint and the complaint against Vairamuthu
31.5.2023
மல்யுத்த வீராங்கனைகளின் புகார் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், புகாருக்குரிய நபரை கைது செய்தால்தான் போராட்டத்தை நிறுத்துவோம் என கூறுவது தவறு என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதற்கு கவிஞர் வைரமுத்து மீதான புகாரையும் அவர் ஒப்பிட்டு கருத்து தெரிவித்தார்.
அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து இண்டிகோ மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவரிடம் ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே. வெற்றி கூறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் “சி.எஸ்.கே-வில் ஒரு தமிழர் கூட விளையாடவில்லை என்றாலும் அந்த அணியை எல்லாருக்கும் பிடிக்கும். தமி்ழர்கள் விளையாண்ட குஜராத் அணி தோல்வி அடைந்துள்ளது.
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் குறித்த கேள்விக்கு, “திமுக நண்பர்கள் வைரமுத்துவிடம் பாடகர் பாலியல் புகார் சம்பந்தமாக கேள்வி கேட்கட்டும். அவர் மீது ஒரு பெண் புகார் கொடுத்தார். ஆனால் அவர் மீது எம்.ஐ.ஆர்.கூட பதிவு செய்யவில்லை. இதுபற்றி நாங்கள் கேள்வி கேட்கவில்லை. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே எல்லா குற்றத்திற்கும் ஆதாரம் வேண்டும். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்தால் தான் போராட்டத்தை நிறுத்துவோம் என்பது தவறு” என கூறினார்.
மதுரைக்கு துரோகம்
நிதியமைச்சர் பி.டி.ஆரின் ஒளிப்பதிவை அடுத்து, இலக்கா மற்றும் செய்தது குறித்த கேள்விக்கு, “பி.டி.ஆர் அமைச்சரவை மாற்றம் செய்தது மதுரைக்கும், மதுரை மக்களுக்கும் செய்த துரோகம். ஐடி அதிகாரிகள் தாக்குதல் சம்பந்தமாக காவல் துறையினர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
வெளிநாட்டில் பயின்ற மருத்துவ மாணவர்களின் கல்விக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விக்கு, “வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் இந்தியாவில் படிக்க வேண்டும் என்றால் முதலில் மாநிலங்கள் முன் வரவேண்டும். பாடத்திட்டங்கள் மாறுபடும். அது முள்ளுமேல போட்ட சேலைப்போல பல சிக்கல்கள் இருக்கிறது. அதை தீர்க்க வேண்டுமு். வெளிநாட்டில் இருந்து மாணவர்களை கொண்டு வந்திருக்கிறோம். இதற்கு ஒரு தீர்வை கண்டுபிடிப்போம்” என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:-
முதலீடு
வெளிநாட்டில் இந்தியாவின் பேசும் நபராக மோடி இருக்கிறார். ஆனால் மு.க.ஸ்டாலினை தெரியாது. எனவே மோடியை பயன்படுத்தி தமிழகத்திற்கு முதலீடு வாய்ப்பை ஈர்த்து வரவேண்டும். தமிழகத்திற்கு ஆக்கபூர்வமான விஷயங்களை முதல்வர் கொண்டு வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
உத்தபிரதேசத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதம் இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தமிழ்நாடு வந்து 2 நாட்கள் தங்கிருந்து இங்குள்ள தொழில் அதிபர்கள் மூலம் 10 ஆயிரம் கோடி முதலீடு அவர்கள் மாநிலத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள். தமி்ழ்நாடு முதல்வர் எவ்வளவு முதலீட்டை கொண்டு வருவார் என்று பார்ப்போம். மகராஷ்டிராவில் இருந்து முதலீட்டைகூட இங்கு கொண்டு வர முயற்சிக்கலாம்.
காந்தி குடும்பத்திற்கு செங்கோலை இழிவு படுத்துவது தொடர் கதையாக உள்ளது. அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவுக்கு சென்று செங்கோலை இழிவு படுத்துகின்றனர்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.