June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

மக்கள் நலப்பணிகள் சங்க மாநில செயற்குழுக் கூட்டம்

1 min read

People’s Welfare Association State Executive Committee Meeting

9.6.2023
தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் நல்.செல்ல பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மாநில மக்கள் நல பணியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வே. புதியவன் மாநில பொருளாளர் ரெங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதுரை மாவட்ட செயலாளர் பிச்சுமணி அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட வருமாறு:-

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறிய படி மக்கள் நலப் பணியாளர்களுக்கு நிரந்தர பணியுடன் பணி நியமன ஆணை வழங்க வேண்டும்.

மக்கள் நல பணியாளர் களுக்கு காலமுறை ஊதியத்தை கருவூலம் மூலம் வழங்க வேண்டும்.ஓய்வு பெற்ற மக்கள் நல பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர்களாக பணியாற்றி வரும் மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணியிட மாறுதல் வழங்க உரிய அரசாணைகளை வெளியிட வேண்டும்.

தமிழகத்தின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியபடி இறந்துவிட்ட மக்கள் நலப்பணியாளர் களுக்கு குடும்பப் பாதுகாப்பு நிதியாக ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும்.உள்ளிட்ட தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை
4 ம் தேதி செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து மக்கள் நலப்பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் தேனி மாவட்ட தலைவர் சுதர்சன், திருப்பூர் மாவட்ட தலைவர் சிவக்குமார், விருதுநகர் மாவட்ட தலைவர் முத்துப்பாண்டியன் சிவகங்கை மாவட்ட தலைவர் சுரேஷ், நெல்லை மாவட்ட தலைவர் சங்கர், தென்காசி மாவட்ட தலைவர் வாசு முருகன், விழுப்புரம் மாவட்ட தலைவர் கந்தவேல், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் சுரேஷ், தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராமசுப்பு, மாநில துணைத்தலைவர் ராமநாதபுரம் காந்தி, உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் புதுக்கோட்டை குழந்தைவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.