நாடும் நமதே நாற்பதும் நமதே. – முதல்வர் ஸ்டாலின் பேச்சு
1 min read
The country is ours and the forty are ours. – Chief Minister Stalin’s speech
10.6.2023
கருணாநிதி நூற்றாண்டில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம். நாடும் நமதே நாற்பதும் நமதே. இதை சேலத்தில் நின்று உரக்கச் சொல்கிறேன் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
செயல்வீரர்கள் கூட்டம்
சேலம் மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
திராவிட இயக்கம் உருவாகிய மண் சேலம். கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாட உள்ளோம். கருணாநிதி நூற்றாண்டில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம். பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும். குறிப்பாக சேலத்தில் வென்றாக வேண்டும். நாடும் நமதே நாற்பதும் நமதே. இதை சேலத்தில் நின்று உரக்கச் சொல்கிறேன்.
பாராளுமன்ற தேர்தல் விரைவில் வரலாம். அடுத்த ஆண்டு என அலட்சியமாக இருக்க வேண்டாம். உழைப்பிறகான அங்கீகாரம் கட்சியினரை நிச்சயம் வந்து சேரும்.
தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு செய்த திட்டங்களின் பட்டியலை அமித்ஷா வெளியிட வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து அமித்ஷா விளக்க வேண்டும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஏராளமான திட்டங்களைப் பெற்றுத் தந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.