தென்காசியில் கருணாநிதிக்கு சிலை வைக்க மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அனுமதி கோரி மனு
1 min read
A petition seeking permission from the district head to erect a statue of Karunanidhi in Tenkasi
11.6.2023
தென்காசியில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு கருணாநிதியின் முழுவுருவ வெண்கலச்சிலை அமைக்க தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறைப்படி அனுமதி கோரி மனு வழங்கப்பட்டது.
நகர்மன்ற கூட்டம்
தென்காசி நகர் மன்றத்தின் சாதாரண கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது அந்தக் கூட்டத்தில் தென்காசி நகர் மன்ற தலைவர் ஆர்.சாதிர், துணைத் தலைவர் கே.என்.எல்.சுப்பையா ஆகியோரின் சொந்த செலவில் தென்காசி நகரில் முன்னாள் தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்க ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் தென்காசி நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள காலி யிடத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு முழுவுருவ வெண்கல சிலை அமைக்க முறைப்படி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் உரிய அனுமதி பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி நகர் மன்ற தலைவர், தி.மு.க. நகர செயலாளர் ஆர்.சாதிர் தலைமையில் , துணைத் தலைவர் கே.என்.எல். சுப்பையா முன்னிலையில் தென்காசி நகர திமுக நிர்வாகிகள் , திமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் திமுக நகர மன்ற உறுப்பினர்கள் திமுக கூட்டணி கட்சிகளின் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவு நகர் மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நேற்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரனை சந்தித்து தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு வெண்கலை சிலை அமைக்க தென்காசி நகர்மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வழங்கி உரிய அனுமதி வழங்க கோரினார்கள்.
இந்த வெண்கல சிலை தென்காசி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர் ஆர்.சாதிர் , துணைத் தலைவர் கே.என்.எல்.சுப்பையா ஆகியோரின் சொந்த செலவில் வைக்கப்பட உள்ளது என்ற தகவலையும் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி நகர் மன்ற உறுப்பினர் வசந்தி வெங்கடேஸ்வரன், சுப்பிரமணியன், கார்த்திகா, நாகூர் மீரான், அபுபக்கர், ராமகிருஷ்ணன், சுமதி இசக்கி ரவி, கல்பனா கங்காதரன், ஆசிக் முபினா, தென்காசி நகர திமுக பொருளாளர் அ.சேக்பரீத், நகர மாணவரணி அமைப்பாளர் மைதீன், கங்காதரன், சன் ராஜா, சபரி சங்கர், சங்கர் ராஜன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.