June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

பெத்தநாடார்பட்டியி்ல் பரிசளிப்பு விழா

1 min read

Award ceremony at Pethanadarpatti

11.5.2023
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம்,
பெத்தநாடார்பட்டி நூலகத்தில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

வாசிப்பு திறன்

பாவூர்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடார்பட்டி நூலகத்தில் கோடை விடுமுறையில் வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில், தினசரி நூலகத்திற்கு வந்து புத்தகங்களை வாசித்த மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் வெற்றி பெற்றவர்கள் பரிசளிப்பு விழா நூலக வளாகத்தில் நடைபெற்றது. நூலகர் பொன்சிங் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி கலைச் செல்வன், துணைத்தலைவர் ஜெயராணிஅந்தோணிராஜ் ஆகியோர் பங்கேற்று, பரிசுகளை வழங்கினர். வைத்திலிங்கம் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *