July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

செங்கோட்டையில் கருணாநிதி நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டி

1 min read

Karunanidhi Centenary Cricket Match at Red Fort

11.6.2023
தமிழக முன்னாள் முதல்வரும் , திமுக முன்னாள் தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு,
மாபெரும் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி மற்றும் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் மேலான ஆணைக்கிணங்க, தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் அறிவுறுத்துதலின் படி, செங்கோட்டை நகர திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் நகர விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் மாபெரும் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு செங்கோட்டை நகர திராவிட முன்னேற்ற கழக செயலாளர் வழக்கறிஞர்
ஆ.வெங்கடேசன் தலைமை தாங்கினார். செங்கோட்டை ஒன்றிய திமுக செயலாளர் ஆ.ரவிசங்கர், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எம்.ரஹீம்
செங்கோட்டை நகர கழக நிர்வாகிகள் காளி, ஜோதிமணி, தில்லை கே. நடராஜன், ஆ.பாஞ்ச் பீர்முகம்மது, லெ.சுப்பிரமணி யன், பொ.மணிகண்டன் கலைஞர் தமிழ்ச் சங்க செயலாளர் வழக்கறிஞர் மு.ஆபத்துக்காத்தான் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

நகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ரெட் சரவணன் வரவேற்புரை யாற்றினார்.

தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

முதல் பரிசு செங்கோட்டை ரெட் ரோஸ் குழுவினரும், இரண்டாம் பரிசு தாட்கோ நகர் ஏ எம் கே எஸ் அணியினரும், மூன்றாம் பரிசு வம்பளந்தான் முக்கு டிராகன் பாய்ஸ் அணியினரும், நான்காம் பரிசு கதிரவன் காலனி கே சி வாரியர்ஸ் அணியினரும் பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சு.வேலுச்சாமி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பி.எஸ் மாரியப்பன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர்கள் மோகன், சுப்பிரமணியன், குற்றாலம் பேரூர் கழக செயலாளர் குட்டி என்ற சங்கர், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காதர் அண்ணாவி, மாவட்ட மகளிர் அணி தலைவர் பேபி ரஜப் பாத்திமா, பொறியாளர் அணி அமைப்பாளர் சொ.கருப்பணன், விவசாய தொழிலாளர் அணி துணைத் தலைவர் நசீர், வார்டு கழக நிர்வாகிகள்ஆ.சண்முகராஜா மாரியப்பன், இப்ராகிம்,சேட் (எ) சேக்மதார்,வேலுமணி, விஜி என்ற விஜயபாரதன், பேச்சாளர் செங்கை குற்றாலிங்கம், புலவர் மணிகண்டன் பிரதிநிதிகள் கல்யாணி, நாகூர்கனி, நாட்டாமை ஆறுமுகம், ஆ.சங்கர்கணேஷ், கொக்கரக்கோ கோவிந்தன், ராமகிருஷ்ணன், காளி,ஐயம் பெருமாள், காந்திபாபு, மணிகண்டன், ஆறுமுகத்தேவர், ஜான்சன், நகர்மன்ற உறுப்பினர் இசக்கித்துரை பாண்டியன், கேஆர் மோகன், நீராத்திலிங்கம், பாலசந்தர், கார்த்திக், தனுஷ், ஹரிஷ், ஆனந்த், கணேசன் ,சிவா, திருமால்,தங்கையா, குமார், பரமசிவன், தங்கராஜ், ஆறுமுகம், சிவகுமார், ஆர்பிஎப் மணி, ரவிக்குமார், பரமசிவன்,சந்தோஷ், காலித், தளபதி சுரேஷ்,செல்வராஜ், மோகன் மற்றும் கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். முடிவில் தீயணைப்புத்துறை செந்தில் நன்றியுரை ஆற்றினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.