கல் குவாரிகளை தடை செய்யக்கோரி தென்காசியில் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்
1 min read
CPM protests protest in Tenkasi demanding ban on quarries
14.6.2023
அனுமதியில்லா கல்குவாரிகளை தடை செய்திடக் கோரியும் கனிம வளங்கள் கொள்ளை போவதை தடுத்திடக் கோரியும் தென்காசியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
கனிவளம் கடத்தல்
தென்காசி மாவட்டத்தில் கடையம், தென்காசி, வாசுதேவநல்லூர், சங்கரன் கோவில், திருவேங்கடம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியரின் தகவல் படி அரசு அனுமதி பெற்ற குவாரிகள் 37 உள்ளன. ஆனால் அரசு அனுமதி பெறாமல் 100க்கும் மேற்பட்ட கல்குவாரிகள், எம்சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் சட்டத்தை மீறி செயல்படு கின்றன. அதோடு இந்த நிறுவனங்கள் மூலமாக ஏராளமான சல்லி மற்றும் எம் சாண்ட், சில இடங் களில் மணல் உள்ளிட்ட இயற்கை வளங்கள் தொடர்ந்து சுரண்டப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு உட்பட்ட டிப்பர் லாரிகளில் அனுமதி இல்லாமல் கடத்தப்பட்டு வருகின்றன.
இதனை புளியரை சோதனைச் சாவடியில் இருக்கின்ற அதிகாரிகளும் காவல் துறையினரும் கண்டுகொள்ளாத நிலை உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக பலமுறை மாவட்ட நிர்வாகத் திற்கு உரிய முறையில் தகவல் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. தொடர்ந்து கனிம வளங்கள் சுரண்டப்பட்டு வருகின்றன. கல் குவாரி அமைந்துள்ள இடங்களை ஒட்டிய பகுதிகளில் நிலத்தடி நீர் என்பது வெகு வாக குறைந்து வருகிறது. இன்னும் சில ஆண்டுகள் கழித்தால் மக்கள் குடிநீருக்காக அலையக் கூடிய நிலைமை கல்குவாரிகளால் உருவாகி விடும். ஏற்கெனவே விவசாயம் பார்க்க முடியாத நிலைமை ஏற்பட்டு விட்டது. இதற்குக் காரணம் விவசாயத்திற்கான நீர் ஆதாரம் இல்லாததுதான்.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் செயல்படும் கல் குவாரிகளை தடை செய்யக் கோரியும் மக்களின் நீர் ஆதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி மாவட்ட செயலாளர் உ.முத்துப் பாண்டியன் தலைமை தாங்கினார்.
மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி நிர்வாகிகள் டி.கணபதி.
எஸ். அயுப்கான். வி.. குணசீலன். ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் மத்திய குழஉறுப்பினர் பி சண்முகம் மற்றும் மாவட்ட செயர்குழ உறுப்பினர்கள். பி.உச்சிமாகாளி. பி.அசோக்ராஜ், எம். தங்கம். ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழஉறுப்பினர்கள் என்.லெனின்குமார். கே.மாரியப்பன். ஆர். சங்கரி எம்.மணிகண்டன்.டி.வன்னிய பெருமாள். எம்.அருன்.
ஆர். நாடராஜன்.எம்.ராமகிருஷ்ணன், பி. பால்சாமி எஸ். கண்ணன். எஸ்.மாரியப்பன்.என்.பால்ராஜ். இ.பாலு. எம். கனகராஜ். ஏ. அரிய முல்லை. பாரதி பி.ஜெயா ராஜ்.செல்லத்துரை வேனு கோபால் மற்றும் பலர் கலந்துகொண்டனர் முடிவில் மாவட்ட குழஉறுப்பினர்கள் என்.லெனின்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.