June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசிக்கு வருகை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்-தி.மு.க. ஆலோசனை

1 min read

Minister Udayanidhi Stalin visits Tenkasi-DMK. Advice

14.6.2023
தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலக அடிக்கல் நாட்டும் விழா மற்றும், 800 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கவும்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தென்காசி வருகை தருகிறார்.

உதயநிதி ஸ்டாலின்

தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகம் பாவூர்சத்திரம் கேடிசி நகர் பகுதியில் கட்ட தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவ பத்மநாதன் முயற்சி செய்து வருகிறார். இந்த திமுக அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டவும் , தென்காசி தெற்கு மாவட்டத்தில் உள்ள 800 மூத்த முன்னோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.

இந்நிகழ்ச்சிக்கான மேடை அமைக்கும் பணி தொடர்பாக தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ. சிவபத்மநாதன் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை யொட்டி, தென்காசி தெற்கு மாவட்டத்தில் மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் அறிவுறுத்திலின் பேரில் 100 இடங்களில் திமுக கொடியேற்று விழா நடைபெறவுள்ளது. இதில் ஏற்கனவே 3 இடங்களில் திமுக துணை பொதுச்செயலாளர் மு.க. கனிமொழி கருணாநிதி எம்.பி. கொடியேற்றி வைத்துள்ளார். தொடர்ந்து தெற்கு மாவட்டப் பகுதியில் உள்ள ஒன்றியம், நகரம், பேரூர் பகுதியில் 96 இடங்களில் தொடர்ந்து கொடியேற்று விழா நடைபெறவுள்ளது.
100 ஆவது கொடி பாவூர்சத்திரம் கே.டி.சி.நகரில் புதிதாக கட்டப்படவுள்ள மாவட்ட திமுக அலுவலக இடத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கொடிகம்பத்தில் திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினால் ஏற்றபடவுள்ளது,
தொடர்ந்து அந்த இடத்தில் மாவட்ட திமுக அலுவலகத்திற்கு அமைச்சர் உதயநிதி அடிக்கல் நாட்டவுள்ளார். பின்னர் 800 திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் அவர், விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு தொகுப்பும், இந்திய, மாநில, மாவட்ட ,அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊக்கப்பரிசும் வழங்கி பேசுகிறார்.

இந்நிகழ்ச்சிக்காக சுமார் 10 ஆயிரம் கலந்து கொள்ளும் வகையில் மேடை அமைக்கப்படவுள்ளது. இந்நிலையில் மேடை அமைப்பது தொடர்பாக மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன், மேடை அமைக்கும் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் க.சீனித்துரை, மாவட்ட பிரதிநிதி சீ.பொன்செல்வன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் விஜயன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ், மாணவரணி துணை அமைப்பாளர் மாரியப்பன், தொண்டரணி துணை அமைப்பாளர் பொன்மோகன், விவசாய அணி துணை அமைப்பாளர் செல்வன், ஒன்றிய கவுன்சிலர் தர்மராஜ், ராஜாசிங், சுரேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.