June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது- மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் கண்டனம்

1 min read

BJP State Secretary SG Surya Arrested- Union Finance Minister Nirmala Sitharaman Condemned

17.6.2023
பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டார். இதற்கு மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கைது

தமிழக பா.ஜ.க. செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அவதூறு வழக்கில் மதுரை சைபர் கிரைம் போலீசார் தமிழக பா.ஜ.க. மாநில செயலாளரை கைது செய்தனர். சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். மலக்குழி மரணங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், கேள்வி எழுப்பிய எஸ்.ஜி.சூர்யாவை தண்டிக்க முயற்சிப்பது நியாயமா? என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.