இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி – தமிழக அரசு அரசாணை வெளியீடு
1 min read
Minister without Portfolio Senthil Balaji – Tamil Nadu Govt
16/6/2023
செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சர் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
அமைச்சர்
செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது தொடர்பான பரிந்துரையை ஆளுநர் ஏற்க மறுத்துவிட்டார் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின்சாரத் துறையும், அமைச்சர் முத்துசாமிக்கு மது விலக்கு ஆயத்தீர்வை துறையும் ஒதுக்கீடு சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததையடுத்து, அவரிடம் இருந்த இலாகாக்களை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமியிடம் பகிர்ந்தளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து கவர்னருக்கு நேற்று கடிதம் அனுப்பினார்.
அதில் மின்சாரத் துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மது விலக்கு ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதலாக அளிப்பதாக பரிந்துரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லாததால் இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது தொடர்பான பரிந்துரையை ஆளுநர் ஏற்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவார் என தெரிவித்துள்ளது.