ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
1 min read
PM Modi wishes President Draupadi Murmu on his birthday
20.6.2023
தேச வளர்ச்சி மேம்பட பாடுபடும் முயற்சிக்காக பாராட்டப்படுகிறார் என ஜனாதிபதி முர்முவுக்கு, பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு
ஜனாதிபதி திரவுபதி முர்முவின் 65-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அவருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை இன்று தெரிவித்து கொண்டார்.
பிரதமர் மோடிக்கு கடிதம் இதுபற்றி அவர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ராஷ்டிரபதி ஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் ஞானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றிற்கான கலங்கரை விளக்கம் ஆக இருப்பதுடன், நம்முடைய மக்களின் நலன்களுக்காக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். தேசத்தின் வளர்ச்சியை இன்னும் மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிக்காக அவர் பாராட்டப்படுகிறார். அவரது அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் ஓர் உந்துதலாக இருக்கும். அவருடைய உடல்நலம் மற்றும் ஒரு நீண்ட வாழ்வுக்காக வாழ்த்துகிறேன் என தெரிவித்து உள்ளார்.