2024-ல் தென்காசியில் தாமரை மலர்ந்தே தீரும்-ஆலங்குளத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு
1 min read
Public meeting to explain BJP’s achievements in Alankulam-Pon. Radhakrishnan participated
20.6.2023
தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 9 ஆண்டுகால நல்லாட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஆலங்குளம் முத்தாரம்மன் கோவில் திடலில் நடைபெற்றது
தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் கே.ஏ.ராஜேஷ் ராஜா தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட பாஜக பொதுச் செயலாளர்கள் பாலகுருநாதன், அருள்செல்வன், ராமநாதன்,
மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலங்குளம் தெற்கு ஒன்றிய தலைவர் பண்டரிநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் தேசியசெயற்குழுஉறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன் பாரதிய ஜனதா கட்சி அரசு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 9 ஆண்டு கால நல்லாட்சி சாதனை களை விளக்கி பேசினார்.
பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-.
ஒரு ரூபாயில் ரூ.2 லட்சம் விபத்து காப்பீட்டு திட்டம் தந்தவர் பிரதமர் மோடி. சாதாரண பொதுமக்களும் வங்கி பழக்கத்தை பெற்றிட 48 கோடி பேருக்கு புதிய வங்கி கணக்குகள் உருவாக்கியவர் மோடி. இன்று உலக நாடுகள் நம்மை வணங்குகின்றன. ஐ.நா.சபை 193 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா.சபையே நரேந்திர மோடியை உற்று பார்க்கிறது. ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தாமல் காஷ்மீரில் 370 என்ற தனிப்பிரிவை ரத்து செய்து இன்று காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கமாக மாறியுள்ளது. உலகத்திலேயே மிக பெரிய கேன்சர் செண்டர் அசாமில் வருகிறது. 1999-ம் ஆண்டு தென்காசி தொகுதியில் 886 ஓட்டுவித்தியாசத்தில் வெற்றியை இழந்தோம். நல்ல மனிதரை இழந்தோம். அதற்கு ஒருபரிகாரம் உண்டு என்றால் 2024-ல் தென்காசியில் தாமரை மலர்ந்தே தீரும்.கேரளாவில் ஆற்றிங்கல்பகுதியில் கிறிஸ்தவர்கள் சொன்னார்கள் இந்த முறை தங்களின் வாக்கு நரேந்திரமோடிக்குதான் என்று. தமிழகத்தில் 2024 தேர்தலில் 25 பாராளுமன்ற தொகுதியை வெல்ல உள்ளோம். அதில் நம்பர் ஒன்றாக தென்காசி பாராளுமன்றம் இருக்க வேண்டும். தூய்மையான, ஊழலற்ற ஆட்சி தமிழகத்தில் மலர வீடுதோறும் நமது திட்டத்தினை எடுத்து கூறி தாமரையை வெற்றிபெற செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பாரதியஜனதா கட்சி பார்வையாளர் மகாராஜன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.வி.அன்புராஜ், ராமராஜா பாண்டித்துரை, சாரதா பாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட தலைவர் தீனதயாளன், வெளிநாடு வாழ் தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணைத்தலைவர் ஆனந்தன், பாஜக வர்த்தக பிரிவு மாநில செயலாளர் கோதை மாரியப்பன், கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் சிவநாதன் தொழில் பிரிவு மாநில செயலாளர் மகாதேவன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் மருது பாண்டியன், கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் தளவாய் குமார், மாநில விவசாய அணி திட்ட பொறுப்பாளர் கமலா, மாவட்ட துணைத் தலைவர்கள் ராதாகிருஷ்ணன், முத்துக்குமார், முத்துலட்சுமி, பாலசீனிவாசன், பால்ராஜ், பாஜக மாவட்ட செயலாளர்கள் சுப்பிரமணியன், ராஜலட்சுமி புலிக்குட்டி, அர்ஜுனன், ஜானகி, பாஜக மண்டல பார்வையாளர்கள் ஆனந்தி முருகன், முருகேசன், சரவணன், சீனிவாசன், ஜெய கோதண்டராமன், மாரியப்பன், பாஜக மண்டல தலைவர்கள் முருகன், கடையம் கிழக்கு ரத்தினகுமார், கடையம் மேற்கு செந்தில்குமார், தென்காசி நகரம் மந்திரமூர்த்தி, கீழப்பாவூர் கிழக்கு சுரேஷ் முருகன், ஆலங்குளம் வடக்கு அன்புராஜ், சுரண்டை நகர் அருணாச்சலம், மேற்கு மாரியப்பன், செங்கோட்டை ஒன்றியம் மாரியப்பன், தென்காசி வடக்கு ஐயப்பன், செங்கோட்டை நகர் வேம்புராஜ் கடையநல்லூர் நகர் சுப்பிரமணியன், மேலநீலிதநல்லூர் ஒன்றியம் பரமசிவன், கடையநல்லூர் ஒன்றியம் தர்மர், புளியங்குடி நகர் சண்முகசுந்தரம், வாசுதேவநல்லூர் தெற்கு ராம்குமார் வாசுதேவநல்லூர் வடக்கு சோழராஜன், சங்கரன்கோவில் தெற்கு சண்முகராஜ், சங்கரன்கோவில் வடக்கு ஜெயக்குமார், தென்காசி தெற்கு முருகன், தெற்கு சங்கிலி பாண்டியன், சங்கரன்கோவில் நகர் கணேசன்,
பாஜக மாவட்ட அணி பிரிவு தலைவர்கள் இளைஞர் அணி முப்புடாதி, விவசாய அணி முத்துப்பாண்டி, சிறுபான்மை அணி தேவேந்திரன், பழங்குடியினர் அணி பன்னீர்செல்வம், நெசவாளர் பிரிவு சங்கரலிங்கம், சமூக ஊடகப் பிரிவு ரங்கராஜ், வழக்கறிஞர் பிரிவு கார்த்திகேயன், வெளிநாடு வாழ் தமிழர் பிரிவு வரதராஜன், மகளிர் அணி தலைவி அனிதா செந்தில்குமார், பட்டியல் அணி ராமர் ஓ பி சி அணி மாரியப்பன், மீனவர் பிரிவு சுரேந்தர் கல்வியாளர் பிரிவு வெங்கடேஸ்வர பெருமாள், பிரச்சார பிரிவு சங்கரநாராயணன், அரசு தொடர்பு பிரிவு எல்.ஜி. குத்தாலிங்கம், அறிவுசார் பிரிவு அருணாச்சலம், அமைப்பு சாரா பிரிவு வேல்பாண்டி, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு பொன்லிங்கம், கூட்டுறவு பிரிவு ராஜேஷ், தொழில் பிரிவு சிவக்குமார், ஆன்மீகம் கோவில் மேம்பாட்டு பிரிவு வெங்கடேஷ், தரவு தள மேலாண்மை பிரிவு பால சீதாராமன், விருந்தோம்பல் பிரிவு நாகராஜன், முன்னாள் ராணுவ பிரிவு ராமச்சந்திரன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு கண்ணன், ஊடகப்பிரிவு குற்றாலம் செந்தூர் பாண்டியன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு கருப்பசாமி, வர்த்தக பிரிவு ராஜா கலை மற்றும் கலாச்சாரம் பவுன்ராஜ், பொருளாதார பிரிவு ராஜசேகர், தமிழ் இலக்கியப் பிரிவு சுமித்ரா, பிற மொழி பிரிவு சங்கர் ராஜ், மருத்துவப் பிரிவு பால சந்தர், மற்றும் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் பாஜக ஒன்றிய பொதுச் செயலாளர்கள்
குமரகுருபரன், நாகராஜா, ஒன்றிய பொருளாளர் மாரியப்பன்,ஒன்றிய துணைத் தலைவர்கள்
அருள்பாண்டியன், கனகராஜ், வள்ளிநாயகம், ராமசாமி,
பாஜக ஒன்றிய செயலாளர்
கணேசன், லிங்குவேல் ராஜா சிம்சன், மற்றும் வெள்ளைச்சாமி பாண்டியன், வளர்மதி, வைத்தியலிங்கம், எம் வி கண்ணன், ராஜன், அண்ணாவி, ஆறுமுகம், சந்திர போஸ், சண்முகசுந்தரம், நாகராஜன், புனித ராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் பாலமுருகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.