மெரினாவில் பேனா நினைவுச் சின்னத்திற்கு மத்திய அரசு
1 min readCentral Govt to pen memorial at Marina
22/6/2023
கருணாநிதி பேனா நினைவு சின்னத்துக்கு மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
பேனா நினைவுச்சின்னம்
சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் அமைக்கப்பட உள்ள கலைஞர் கருணாநிதி பேனா நினைவு சின்னத்துக்கு மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஏற்று மத்தியஅரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கிய நிலையில், தற்போது கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி அளித்துள்ளது. 15 நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து அனுமதிகளும் கிடைத்திருப்பதால் விரைவில் பணிகளை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.