June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

ரெயில்களில் ஏசி சேர் கார் கட்டணம் 25 சதவீதம் குறைப்பு – ரெயில்வே வாரியம் அறிவிப்பு

1 min read

25 percent reduction in AC add-on car fare in trains – Railway Board Notification

8.7.2023
ரெயில்களில் ஏசி சேர் கார் கட்டணம் 25 சதவீதம் குறைக்கப்படுகிறது. ஏற்கனவே ரிசர்வ் செய்துள்ள டிக்கெட்டுகளுக்கு இச்சலுகை பொருந்தாது.

ஏசி ரெயில் பயணம்

ரெயில்களில் ஏசி சேர் கார் கட்டணம் 25 சதவீதம் குறைக்கப்படுவதாக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, ரெயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வந்தே பாரத் உள்ளிட்ட சில ரெயில்களில் ஏசி சேர் கார் கட்டணம் குறைக்கப்படுகிறது. ஏசி சேர் கார் மற்றும் எக்சிகியூடிவ் வகுப்பு கட்டணம் 25 சதவீதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும், ஏற்கனவே ரிசர்வ் செய்துள்ள டிக்கெட்டுகளுக்கு இச்சலுகை பொருந்தாது. கட்டணம் எதுவும் திருப்பி தரப்படாது. பண்டிகை மற்றும் விடுமுறை கால சிறப்பு ரெயில்களுக்கு இந்த சலுகை கிடையாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *