July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

பாலருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

1 min read

Tourists are allowed to bathe in Balaruvi

10.7.2023
குற்றாலம் அருவிகளில் குளிக்க சீசன் காலத்தின்போது லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவார்கள். பாலருவியானது செங்கோட்டை, புளியரை, கோட்டைவாசல் கடந்து ஆரியங்காவு சோதனை சாவடி அருகில் அமைந்துள்ளது. அங்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

பாலருவி

தமிழகம் மற்றும் கேரளாவுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் எல்லைப் பகுதி மேற்குத்தொடர்ச்சி மலையாகும். இதில் இருந்து உற்பத்தியாகும் குற்றாலம் அருவிகளில் குளிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு சீசன் காலத்தின்போதும் குடும்பத்துடன் வருவார்கள். சீசன் குறையும் போது தமிழக -கேரளா எல்லை பகுதியில் அமைந்துள்ள பாலருவிக்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் படை யெடுக்கும்.
இந்த பாலருவி யானது செங்கோட்டை, புளியரை, கோட்டைவாசல் கடந்து ஆரியங்காவு சோதனை சாவடி அருகில் அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் சுமார் 300 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டும்.

செங்கோட்டையில் இருந்து பாலருவிக்கு சுமார் 30 கிலோமீட்டர் தூரம் உள்ளது. தற்போது தென்மேற்கு பருவ மழை காலதாமதம் உள்ளிட்ட பல காரணங்களால் கடந்த மாத இறுதியில் மக்கள் பயன் பாட்டிற்கு திறக்கப்பட வேண்டிய பாலருவி இதுவரை திறக்கப்பட வில்லை. இந்நிலையில் தற்போது பாலருவியில் குளிக்க சுற்றுலா பயணி களுக்கு கேரளா அரசு அனுமதியளி வழங்கி உள்ளது. இது சுற்றுலா பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.