ஆலடி அருணா நர்சிங் கல்லூரியில் மாநில அளவிலான சதுரங்க போட்டி
1 min read
State Level Chess Tournament at Aladi Aruna College of Nursing
11.7.2023
ஆலடி அருணா நர்சிங் கல்லூரியில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடந்தது.
சதுரங்கப்போட்டி
ஆலங்குளம் அருகே உள்ள ஆலடி அருணா லிபரல் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிலான சதுரங்க போட்டி ஆலடி அருணா அறக்கட்டளை சார்பில் நடந்தது. பரிசளிப்பு விழா இதில் திருச்சி, மதுரை, கோவில்பட்டி, தூத்துக்குடி உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.
கல்லூரி நிர்வாக இயக்குனரும், தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி தலைவருமான டாக்டர். பூங்கோதை ஆலடி அருணா தலைமை தாங்கினார். கடையநல்லூர் பிரின்ஸ் மருத்துவமனை டாக்டர் சஞ்சீவி, ஆலங்குளம் டாக்டர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பாப்புலர் செல்லத்துரை வாழ்த்தி பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் எட்மண்ட் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் கீழப்பாவூர் ஒன்றிய முன்னாள் தி.மு.க. செயலாளர் செல்லப்பா, முன்னாள் தி.மு.க. ஒன்றிய கலை இலக்கிய அணி அமைப்பாளர் மாஞ்சோலை துரை, இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவக்குமார், பஞ்சு அருணாச்சலம், ஜெபராஜன், ரஞ்சித், மணிகண்டன், காவலாகுறிச்சி மகேஷ் பாண்டியன் மற்றும் ஆசிரியர்கள் ஜான்சுபா, ஆறுமுக செல்வி, கவுசல்யா அனு, இந்துராணி, ஜோன் திரிஷா, ராஜேஷ், ஜெயசீலின், ஜெகா உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி முதல்வர் முத்தமிழன் நன்றி கூறினார்.