தென்காசி மாவட்டத்தில் சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் சுய உதவிக்குழுவினர் விண்ணப்பிக்கலாம்
1 min read
Women Self Help Groups can apply to set up Small Grain Restaurant in Tenkasi District
13.7.2023
தென்காசி மாவட்டத்தில் சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் சுய உதவிக்குழுவினர் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.
சென்னை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநரின் செயல்முறை ஆணையின்படி, தென்காசி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய உணவகங்கள் அமைக்க தெரிவிக்க ப்பட்டுள்ளது. 2023 சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு பொதுமக்கள் மத்தியில் சிறு தானியம் குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தவும் மற்றும் சிறுதானிய உணவு பழக்க வழக்கங்களை அதிகப்ப டுத்தவும் மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் சிறுதானிய உணவகம் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள், கூட்டமைப்பினர் இன்று (வியாழக்கிழமைக்குள்) விண்ணப்பித்து பயன்பெறு மாறு மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தெரி வித்துள்ளார்.