டெல்லியில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம்- பிரதமர் மோடி பெருமிதம்
1 min read
BJP alliance leaders meeting in Delhi – PM Modi proud
18.6.2023
ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் டெல்லியில் நடைற்றது.
தேர்தல்
2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் இறங்கி உள்ளன.
அடுத்த நாடாளுமன்ற தேர்தலில், மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க கூடாது என எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி ஆலோசித்து வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் மாபெரும் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் 23-ந்தேதி முதன்முறையாக நடைபெற்றது. இதில், 16 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது மற்றும் பா.ஜ.க.வை வீழ்த்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.
தேர்தலை முன்னிட்டு 26 எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது.
பாஜக கூட்டணி
இதையடுத்து ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 38 கட்சிகள் பங்கேற்கும் கூட்டமும் இன்று டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.வாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கூட்டம் நடைபெறும் அரங்கிற்கு வருகை தந்தார். நாடாளுமன்ற தேர்தல் குறித்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட 38 கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் குறித்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட 38 கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். டெல்லியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்த பிரதமர் மோடியை மாலை அணிவித்து கூட்டணி கட்சித் தலைவர்கள் வரவேற்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், டெல்லியில் நடைபெறும் கூட்டத்திற்கு கூட்டணி கட்சி தலைவர்கள் வந்திருப்பது அளவற்ற மகிழ்ச்சியை கொடுக்கிறது. எங்களது கூட்டணி பல்வேறு சோதனைகளை கடந்த கூட்டணி. தேசத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் கூட்டணி இது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.