June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட பாஜக ஆலோசனைக் கூட்டம்

1 min read

Tenkasi district BJP consultative meeting

18.7.2023
தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் கே.ஏ.ராஜேஷ் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட பாஜக பொதுச் செயலாளர்கள் பாலகுருநாதன், அருள்செல்வன், ராமநாதன்,
மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தென்காசி மாவட்ட பாரதியஜனதா கட்சி பார்வையாளர் மகாராஜன் ஆகியோர் கலந்து கொண்ட சிறப்பு ஆலோசனை கூட்டம் தென்காசி ஜகன்நாத் ராஜா அரங்கில் நடைபெற்றது

இந்த கூட்டத்தில் நிறைவே ற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு

வருகின்ற 23.07.23 அன்று தமிழகம் முழுவதும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து பாரதிய ஜன கட்சியின் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி நடைபெற இருக்கிறது .அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் அனைத்து மண்டல்களிலும் சிறப்பான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், ஆகஸ்ட் செப்டம்பர் மாதம் தென்காசி மாவட்டத்திற்கு என் மண் என் மக்கள் என்கின்ற பெயரில் நடை பயணம் வரும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் திரளான அளவில் தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் கலந்து கொள்ள செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தென்காசி மாவட்ட பாஜக துணைத் தலைவர்கள் முத்துக்குமார், ராதாகிருஷ்ணன், பால ஸ்ரீனிவாசன், முத்துலட்சுமி, பாஜக மாவட்டச் செயலாளர் அர்ஜுனன்,பாஜக மகளிர் அணி மாவட்ட தலைவர் அனிதா செந்தில்குமார், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் ஜி. குத்தாலிங்கம், சமூக ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் ரங்கராஜ், உள்ளிட்ட மாவட்ட மாநில மண்டல் அணி பிரிவு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *