நடைபயிற்சியின்போது தவறி விழுந்து காங். தலைவர் கே.எஸ்.அழகிரி காயம்
1 min read
Kong tripped while walking. Chairman KS Alagiri injured
29.7.2023
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சிதம்பரம் அருகே நேற்று நடைபயிற்சி மேற்கொண்டபோது தவறி விழுந்ததில் அவருக்கு நெற்றி மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு நேற்றே வீடு திரும்பினார்.
கே.எஸ்.அழகிரி
ராகுல் காந்தியின் எம்பி பதவி இழப்பு, நீதிமன்றங்களில் ராகுல் காந்திக்கு எதிராக தீர்ப்புகள் வருவது, மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமை போன்ற காரணங்களால் தொடர்ந்துமத்திய அரசுக்கு எதிராக அறிக்கைகள் விடுவது, ரயில் மறியல் போராட்டம், மெழுகுவத்தி ஊர்வலம் போன்ற பணிகளில் தமிழ்நாடுகாங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சமீப நாட்களாகப் பரபரப்பாகக் காணப்பட்டார்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம்அடுத்த கீரப்பாளையத்தில் உள்ளசொந்த கிராமத்துக்கு சில தினங்களுக்கு முன்பு சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று காலை அங்குநடைபயிற்சி மேற்கொண்டபோது, தவறிவிழுந்ததில், அவருக்கு நெற்றியிலும், கால் மூட்டு பகுதியிலும்லேசான காயம் ஏற்பட்டது. அவர்மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சைக்குபிறகு வீடு திரும்பினார். தற்போது ஓய்வெடுத்து வருகிறார்.
இந்த திடீர் விபத்தால், நேற்று மாலை காட்டுமன்னார்கோவிலில் நடைபெற்ற, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் எல்.இளையபெருமாளின் நூற்றாண்டு தொடக்கவிழாவில் பங்கேற்க இயலவில்லை என சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.