May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

7 செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட்

1 min read

PSLV launched with 7 satellites C-56 rocket

30/7/2023
7 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

7 செயற்கை கோள்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் ஏவுவதற்கான இறுதிக்கட்ட பணியாக 25½ மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 5.30 மணிக்கு தொடங்கியது. கவுண்ட்டவுன் முடிந்த நிலையில் திட்டமிட்டபடி காலை 6.30 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக புறப்பட்டுச் சென்றது. ராக்கெட் ஏவும் நிகழ்வை காண்பதற்காக ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர். இந்த ராக்கெட்டில் சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான 360 கிலோ எடை கொண்ட ‘டிஎஸ்-சார்’ என்ற பிரதான செயற்கை கோள் உள்பட மொத்தம் 7 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இந்த ‘டிஎஸ்-சார்’ செயற்கை கோள் டி.எஸ்.டி.ஏ. (சிங்கப்பூர் அரசு) மற்றும் எஸ்.டி. என்ஜினீயரிங் இடையேயான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்டது.

‘இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்’ (ஐ.ஏ.ஐ) உருவாக்கிய செயற்கை துளை ரேடார் கருவியை கொண்டுள்ள இந்த செயற்கை கோள் அனைத்து வானிலை தகவல்களையும் துல்லியமான படங்களையும் வழங்கும் திறன் கொண்டதாகும்.

நிலைநிறுத்தப்பட்டது

இந்த செயற்கை கோள் பூமியில் இருந்து 5 டிகிரி சாய்வில் 535 கி.மீ. உயரத்தில் பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. மற்ற செயற்கை கோள்களும் அவற்றுக்கான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. செயற்கை கோள்களை செலுத்தும் பணி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாகவும், பிஎஸ்எல்வி-சி56 வாகனம் 7 செயற்கை கோள்களையும் அவற்றின் சுற்றுப்பாதையில் துல்லியமாக செலுத்தியதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவுக்கு சந்திரயான்-3 விண்கலத்தை ஏவிய சில வாரங்களுக்குப் பிறகு மற்றொரு முக்கிய நிகழ்வாக, இன்று 7 செயற்கை கோள்களை செலுத்தியிருப்பது, இந்தியாவின் விண்வெளி ஆய்வுப் பயணத்தில் மற்றொரு மைல்கல் ஆகும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.