August 13, 2026

Seithi Saral

Tamil News Channel

எதிர்க்கட்சி கூட்டணி பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

1 min read

Opposition Alliance delegation meeting with the President

2..8.2023
எதிர்க்கட்சி கூட்டணி பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியுடன் சந்தித்தது.

எதிர்க்கட்சி கூட்டணி

இந்தியா என்று பெயரி் சூட்டியுள்ள எதிர்க் கூட்டணியைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள் மணிப்பூரில் வன்முறை நடைபெற்ற இடங்களை பார்வையிட இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருந்தனர். அங்குள்ள கள நிலவரங்களை ஆராய்ந்து ஒரு அறிக்கை தயார் செய்தனர். இரண்டு நாள் பயணம் முடிந்த நிலையில், மணிப்பூர் மாநில கவர்னரை சந்தித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு-வை எதிர்க்கட்சி கூட்டணி பிரதிநிதிகள் சந்தித்தனர். அப்போது மணிப்பூர் கள நிலவரம் குறித்து தயார் செய்த அறிக்கையை சமர்ப்பித்தனர். முன்னதாக, நேற்று முன்தினம் திடீரென அமித் ஷா ஜனாதிபதியை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *