மதிப்பூதியத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பிய தென்காசி நகர்மன்றத் தலைவர்
1 min read
The amount was sent to the Chief Minister’s Relief Fund Chairman of Tenkasi Municipal Council
5.8.2023
தமிழக அரசு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம் வழங்கும் வகையில் தென்காசி நகர் மன்ற தலைவருக்கு வழங்கிய மதிப்பூதியத்தை தென்காசி நகர் மன்ற தலைவர் ஆர். சாதிர் தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூபாய் 6,75,000 ரூபாய்க்கான காசோலையை நகராட்சி ஆணையர் மூலமாக வழங்கினார்.
இதுபற்றி தென்காசி நகர்மன்றத் தலைவர் ஆர்.சாதிர் கூறியதாவது:-
நான், தென்காசி நகர்மன்ற தலைவராக கடந்த 15 மாதங்களாக மக்கள் பணியாற்றி வருகின்றேன். கடந்த உள்ளாட்சி தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக தேர்தலில் போட்டியிட்ட போது. தென்காசி நகர மக்களுக்கு ஒரு வாக்குறுதியை அளித்திருந்தேன்.
அதன்படி நான் நகர்மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டால் அரசு வாகனம், தனி உதவியாளர். ஓட்டுநர், குளிரூட்டப்பட்ட அறை மற்றும் மன்றபடி என இது போன்று அரசு சார்பாக வழங்கப்படும் எந்த ஒரு பலனையும் மக்களின் வரிப்பணத்தில் பெறமாட்டேன். என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு இது நாள் வரை அரசு சலுகைகளை பெறாமல் இருந்து வருகின்றேன்.
தற்போது தமிழக அரசு நகர்மன்ற தலைவர்களுக்கு மாதம்தோறும் மதிப்பூதியமாக ரூ- 15,000/- வழங்குவதற்கு மாண்புமிகு முதல்வர் ஆணையிட்டு ள்ளார்கள் நான் தலைவர் கலைஞரின் வழி நடப்பவனாகவும், மாண்புமிகு முதல்வர் அவர்களை பின் தொடர்பவன் என்ற முறையிலும், இந்த ஆண்டு கலைஞரின் நூற்றாண்டு விழாவினை நினைவுகூறும் வகையில், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு எனக்கு வழங்கப்படும் மதிப்பூதிய தொகை மாதம் ரூ 15000/- என்னுடைய மக்கள் பணியில் மீதமுள்ள 45 மாதகாலமும் ரூ 6.75.000/- (ஆறு லட்சத்து எழுபந்தைந்தாயிரத்தை) தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு மாதந்தோறும் அளித்திட உத்தேசித்து உள்ளேன் அதன்படி எனக்கு வழங்கப்படும் மாத ஊதியம் ரூ15000/- யை தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு துறைரீதியாக வங்கி வரைவோலை மூலம் அனுப்பிவைத்திட உரிய நடவடிக்கை எடுக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள் கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.