தென்காசியில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
1 min read
Tobacco seller arrested in Tenkasi
5.8.2023
தென்காசியில் தமிழக அரசு தடை செய்துள்ள புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து 50 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தென்காசி கூலக்கடை பஜார் பகுதியில் ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.எஸ்.பாலமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளப்பாண்டி மற்றும் போலீசார் நேற்று அந்த கடைக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அந்த கடையில் சுமார் ரூ.41 ஆயிரம் மதிப்பிலான 50 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் தைக்கா தெருவை சேர்ந்த சலீம் என்பவரை கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.