தென்காசி பகுதியில் குட்கா கடத்தல் 2 பேர் கைது
1 min read
Gutka smuggling 2 arrested in Tenkasi region
7.8.2023
தென்காசி அருகே ஆட்டோவில் குட்கா கடத்திய இரண்டு பேர்களை கைது செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்தப் பட்ட ஆட்டோ மற்றும் ஒரு லட்சம் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளியை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் உத்தரவின் பேரில் துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் மேற்பார்வையில் தென்காசி காவல் ஆய்வாளர் கே.எஸ்.பாலமுருகன் தலைமையில் தனிப்படை உதவி ஆய்வாளர் சுதாகர், சிறப்பு உதவி ஆய்வாளர் வெள்ளபாண்டி, முதல்நிலைகாவலர் சரவணகுமார், சிவப்பிரகாஷ், சேர்மக்கண்ணன், அன்பரசன், குத்துக்கல் வலசை பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை வழிமறித்து சோதனை செய்தனர்.
அப்போது அந்த ஆட்டோவில் போது வெள்ளமடை பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் சுரேஷ், ஆட்டோவை ஒட்டிவந்த கீழப்புலியூர் ஊரைச் சேர்ந்த சதீஷ் ஆகியோர் தமிழக அரசால் தடை செய்யபட்ட குட்கா புகையிலை கடத்தி வந்தது தெரியவந்தது.
உடனடியாக இருவரையும் கைது செய்து ஆட்டோவை மும் பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கரடிகுளம் பகுதியில் இருந்து குட்கா வை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.
உடனடியாக தனிப்படை போலீசார் கரடிகுளம் பகுதிக்குச் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த தடைசெய்யப்பட்ட 1 லட்சம் ரூபாய் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த பணியில் ஈடுபட்ட தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் கே எஸ் பாலமுருகன் உள்ளிட்ட காவல்துறை யினரை தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் சாம்சன் வெகுவாக பாராட்டினார்.