தென்காசி மருந்தாளுநர் சங்கப் பொதுக்குழு கூட்டம்
1 min read
Tenkasi Pharmacists Association General Committee Meeting
7.8.2023
தென்காசி மாவட்ட அனைத்து மருந்தாளுநர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் எம்.நவாஸ்கான் தலைமையில் நடைபெற்றது. லட்சுமணன் அனைவரையும் வரவேற்று பேசினார். பொருளாளர் கோமதி வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார், மாவட்ட செயலர் குமார் விளக்க உரை ஆற்றினார்.. மார்த்தாண்ட பூபதி , மாவட்ட துணை தலைவர் .அரசு ஊழியர் சங்கம், தென்காசி மாவட்டம், ரமேஷ், மாநில தணிக்கையாளர், அனைத்து மருந்தாளுநர் சங்கம்| சண்முகம் மாநில பொது செயலாளர், தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநர் சங்கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்த கூட்டத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும் பொது சுகாதார துறையில் மருந்தாளுநர் களுக்கு அடிப்படை வசதி ஏதும் வழங்காமல் பணிசெய்ய கட்டாயப் படுத்துவது நெருக்கடி கொடுப்பது-நிறுத்துவதற்கு தீர்மானம் நினறவேற்றப் பட்டது.
தென்காசி தலைமை மருத்துவமனை மற்றும் அனைத்து மருத்துவமனை களிலும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருந்தாளுநர் பதவியினை தோற்றுவித்து பூர்த்தி பண்ண வேண்டும்.
தென்காசி மாவட்டத்தில் 52 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 25 மருந்தாளுநர் (50%) காலியிடம் உள்ளன. அதனால் நோயாளிகள் அவதியடைவதால் காலியிடங்களை உடனே பூர்த்தி பண்ண வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் அனைத்து மருந்தாளுநர்கள் சங்கத்தின் இணைச்செயலாளர் முருகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.