தென்காசி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் புதிய கட்டிடத்திற்கு மாற்றம்
1 min read
Gutka smuggling 2 arrested in Tenkasi region
7.8.2023
தென்காசியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம், முதன்மை சார்பு நீதிமன்றம் மற்றும் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகிய மூன்று நீதிமன்றங்கள் மட்டுமே புதிய நீதிமன்ற வளாக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு தென்காசியில் முதன்மை மாவட்ட நீதிமன்றம் மற்றும் முதன்மை குற்றவியல் நீதிமன்றங்கள் அமைய அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் அதனை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் திறக்க ஏதுவாக ஏனைய நீதிமன்றங்கள் ஏற்கனவே செயல்பட்டு வந்த கட்டிடங்களில் தொடர்ந்து செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் தென்காசி
வருவாய் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்த தென்காசி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாற்றி அமைக்க வழக்கறிஞர்கள் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில்
வழக்கறிஞர்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு தென்காசி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 07.08.2023 திங்கட்கிழமை முதல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு செயல்பட திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தென்காசி அட்வகேட்ஸ் அசோசியேசன் சங்க செயலாளர் ஏ.வி.புகழேந்தி தெரிவித்துள்ளார்.
தென்காசி வருவாய் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்த தென்காசி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 07.08.2023 திங்கட்கிழமை முதல் தென்காசி-திருநெல்வேலி சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு செயல்பட உள்ளது.