அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம்- சி.பி.ஐ. விசாரணை கோரிய மனு தள்ளுபடி
1 min read
Minister Palanivel Thiagarajan Audio Issue- C.P.I. Petition for hearing dismissed
7.8.2023
30 ஆயிரம் கோடி ரூபாய் விவகாரம் தொடர்பான அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பிராணேஷ் ராஜமாணிக்கம் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, “அரசியல் காரணங்களுக்கு உச்சநீதிமன்றத்தை பயன்படுத்தாதீர்கள். கிரிமினல் சட்டவிதிகளின் கீழ் போதிய நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று இருக்கும்போது, நீதிமன்றத்தை அரசியலுக்கான தளமாக பயன்படுத்தக் கூடாது” என மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்தார்.