செங்கல்பட்டில் லாரி மோதி 4பேர் பலி
1 min read
4 killed in truck collision at Chengalpat
செங்கல்பட்டில் டிப்பர் லாரி மோதிய விபத்தில் 4பேர் சம்பவ இடத்திலே பலியாகினர்
விபத்து
செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகர் அருகே பொத்தேரியில், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எம்சாண்ட் ஏற்றிக்கொண்டு வந்த லாரி, சாலையின் தடுப்பு மற்றும் சிக்னலை உடைத்து எதிர்புறம் சென்றுள்ளது. அப்போது அங்கு சாலையை கடப்பதற்காக நின்றிருந்த 4 இருசக்கர வாகனங்கள் மீது லாரி மோதியது.
இந்த விபத்தில் எஸ்ஆர்எம் கல்லூரி பயோ கெமிஸ்ட்ரி மாணவர் கார்த்தி, பிகாம் மாணவர் ஜஸ்வந்த் உயிரிழந்தனர். மற்றொரு இருசக்கர வாகனத்தில் பயணித்த பார்த்தசாரதியும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சாலையை கடப்பதற்காக நின்ற பவானி என்ற பெண்மணியும் சடலமாக மீட்கப்பட்டார். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் 2 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.