நிலவை சுற்றிவரும் லேண்டரின் சுற்றுப்பாதை மேலும் குறைப்பு
1 min read
A further reduction in the orbit of the lander around the moon
18.8.2023
சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து நேற்று பிரிந்த லேண்டர், நிலவை நெருங்கி வருகிறது. நிலவின் தென் துருவப் பகுதியில் லேண்டர் தரையிறங்க உள்ளது.
இந்நிலையில், நிலவை சுற்றிவரும் லேண்டரின் சுற்றுப்பாதை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 153163 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சுற்றுவட்டப்பாதை தற்போது 113157 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. லேண்டரில் உள்ள 4 இயந்திரங்களில் 2 இயரந்திரங்கள் இயக்கப்பட்டு லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டது. லேண்டரின் அடுத்த செயல்பாடு ஆகஸ்டு 20ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
லேண்டரை வரும் 23ம் தேதி நிலவில் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய புகைப்படம்
இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் எடுத்த புதிய புகைப்படத்தை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது. கடந்த 15ம் தேதி விக்ரம் லேண்டர் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. நிலவில் தரையிறங்கவுள்ள இடத்தை லேண்டர் படம்பிடித்துள்ளதாக தகவல். கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆகஸ்டு 9ம் தேதி விக்ரம் லேண்டர் பிடித்த முதல் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டிருந்தது.