July 4, 2025

Seithi Saral

Tamil News Channel

சந்திரயான்-3 விண்கலம் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்கள் -இஸ்ரோ வெளியீடு

1 min read

Chandrayaan-3 spacecraft releases new photos of moon – ISRO release

21.8.2023
சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்கள் சிலவற்றை இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்டுள்ளது.

புகைப்படங்கள்

நிலவில் லேண்டர் தரையிறங்கத் தோதான இடங்களை லேண்டர் தொடர்ந்து புகைப்படம் எடுத்து அனுப்பி வருகிறது.
அந்த வகையில், வருகிற 23-ந் தேதி மாலை 6.04 மணிக்கு லேண்டர் தரையிறங்கவுள்ள நிலையில் இன்று லேண்டர் எடுத்த புதிய புகைப்படங்கள் சில வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் புகைப்படங்கள் ஆகஸ்ட் 19 ஆம் தேதி எடுக்கப்பட்டவையாகும்.
தற்போது சந்திரயான் 3 நிலவில் இருந்து 25 km x 134 km குறைக்கப்பட்ட தூரத்தில் உலவி வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நிலவுக்கு ரஷ்யா அனுப்பிய லூனா-25 விண்கலம், தரை இறங்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப் பாதையில் நுழையும் போது கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து நொறுங்கியது. இதனால் தற்போது ஒட்டுமொத்த விண்வெளி ஆராய்ச்சி உலகின் கவனமும் இஸ்ரோவின் சந்திரயான் 3-ன் மீது திரும்பியுள்ளது.

இந்நிலையில் இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்கவே லேண்டர் எந்தப் பகுதியை தவிர்க்கலாம் எது தோதான இடமாக இருக்கும் போன்றவற்றை ஆராய்ந்து படம் எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.