தென்காசி மாவட்டத்தில் இலவச பயிற்சி மூலம் குரூப்-4 தேர்வில் வெற்றி 27 பேருக்கு ஆட்சியர் பாராட்டு
1 min read
Collector praises 27 candidates for winning Group-4 examination through free training in Tenkasi district
22.8.2023
தென்காசியில் இலவச பயிற்சி மூலம் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்ற 27 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயமும் வழங்கினார்
இலவச பயிற்சி
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பெற்றுக் கொண்டார்.
அதனைத்தொடர்ந்து தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தன்னார்வ பயிலும் வட்டம் இலவச பயிற்சி வகுப்பு வாயிலாக டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 மற்றும் ,டிஎன்யுஎஸ்ஆர்பி, டி.ஆர்.பி. ஆகிய தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த இலவச பயிற்சியில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்ற 27 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயத்தினையும், மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 07-மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகள் தலா ரூ.8,500 வீதம் மொத்தம் ரூ.59,500 மதிப்பிலான காதொலி கருவிகளும், 11-மாற்றுத்திறனாளிகளுக்கு திறன்பேசிகள் தலா ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ.2,75,000 மதிப்பிலான திறன்பேசிகள் என மொத்தம் ரூ.3,34,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன்; வழங்கினார்.
மேலும் இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 347 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர்; அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கரநாராயணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் .ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மு.முருகானந்தம், மாவட்ட வழங்கல் அலுவலர் (பொ) நடராஜன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரம்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.