தெற்கு கடையத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி திறக்கப்படுமா?
1 min read
Will the Anganwadi built at the south Kadayam opened?
22.8.2023
கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தெற்கு கடையம் பஞ்சாயத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக அங்கன்வாடி கட்டிடம், ரேசன் கடை கட்டப்பட்டது. கட்டிடம் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் அவை திறக்கப்படாத நிலையில் காட்சியளிக்கிறது.
அங்கன்வாடி
தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தெற்கு கடையம் பஞ்சாயத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக அங்கன்வாடி கட்டிடம் மற்றும் ரேசன் கடை சுமார் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடம் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் அவை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படாத நிலையில் காட்சியளிக்கிறது.
இது குறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில், அதிகாரி களின் அலட்சியத்தால் கட்டிடங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல், மக்கள் பணம் வீணாகி கொண்டிருக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகமும் உள்ளாட்சித் துறையும் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்