இலஞ்சிக் குமாரர் திருக்கோவிலில் 3-ந் தேதி புதிய தேர் வெள்ளோட்டம்
1 min read
New Chariot Race at Ilanchik Kumar Temple on 3rd
23.8.2023
தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகே உள்ள இலஞ்சியில் அமைந்துள்ள இலஞ்சி குமாரர் திருக்கோவிலில் வருகிற 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று புதிய தேர் வெள்ளோட்டம் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தமிழக வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
முன்னதாக 2-9- 2023 சனிக்கிழமை மாலை 6:15க்கு அனுப்பி விக்னேஸ்வர பூஜை புண்ணியாக வாசனம் வாஸ்து சாந்தி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 3-9- 2023 காலை 7.35 மணிக்கு சங்கல்யபம் விக்னேஸ்வர பூஜை புண்ணியாக வாசகம் பஞ்சவவ்யம் திரவ்யாகதி பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெறும் அதனைத் தொடர்ந்து கலசங்கள் வலம் வந்து ரத அபிஷேகம் தீபாராதனை நடைபெறும் காலை 10.40 மணிக்கு மேல் புதிய திருத்தேர் வெள்ளோட்டம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக, இந்து சமயம் அறநிலை துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் பி.கே. சேகர்பாபு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரன் , தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமார், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ண முரளி(எ) குட்டியப்பா, ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன்,தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் உள்பட ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கர் இரா.முருகன், ஆய்வர் வா.சரவணகுமார், செயல் அலுவலர் சி.சுசீலா ராணி ஆகியோர் செய்துள்ளனர்.