நாகர்கோவிலில் குழந்தை பிறந்தநாளில் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய தம்பதியர்
1 min read
A couple created awareness by planting a sapling on a child’s birthday in Nagercoil
25.8.2023
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பள்ளிவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜாண் மற்றும் அக் ஷா தம்பதியர். தங்களது முதல் மகனான ஜேரிக் இஸ்ரேலின் இரண்டாவது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகத் தாங்கள் வசிக்கும் பகுதியில் நாவல் மரக்கன்றுகள் நட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில் கடந்த சில ஆண்டுகளாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவ மழை வெகுவாகக் குறைந்து வெயிலின் தாக்கம் அதிகமாகி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இயற்கை வளங்களைக் மேம்படுத்தும் விதமாக தொடர்ந்து மரக்கன்றுகளை நட தீர்மானித்து உள்ளதாகவும் சிறு வயதிலேயே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் நடும் பழக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் அவர்களுக்கு சமூகம் மற்றும் இயற்கையின் மீதான அக்கறை மேம்படும் என்றும் தெரிவித்தனர். இந்நிகழ்வில் பசுமை நாயகனும் சமூக ஆர்வலருமான டாக்டர்.நாராயணன், மூத்த செய்தியாளரும் சமூக ஆர்வலருமான நாகராஜன், ஜனோவின் ஜேக்கப், அப்பகுதியில் பணியாற்றி கொண்டிருந்த மின்சார துறை ஊழியர்கள், மற்றும் அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.