தென்காசியில் கக்கன் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெளியீடு
1 min read
Kakan biopic film release in Tenkasi
26.8.2023
தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டீ கக்கன் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் நேற்று தென்காசியில் திரையிடப்பட்டது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.
கக்கன்
சுதந்திர போராட்ட வீரரும், பெருந்தலைவர்கு.காமராஜர் ஆட்சியில் பல்வேறு துறைகளின் அமைச்சராக நேர்மையின் இலக்கணமாக, திறம்பட பணியாற்றிய தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் தலைவர் பி.கக்கன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ஜோசப் பேபி அவர்களின் தயாரிப்பு மற்றும் கச்சிதமான நடிப்பில் நேற்று வெளியானது.
தென்காசி பத்மம் திரையரங்கில் நேற்று திரையிடப்பட்டது. தென்காசி மாவட்ட காங்கிரஸ் பட்டியல் அணி பிரிவு தலைவர் ராமச்சந்திரன் ஏற்பாட்டில் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சுரண்டை நகர்மன்ற தலைவர் ப.வள்ளிமுருகன், தென்காசி மாவட்ட இலக்கிய அணி தலைவர் பால்துரை, மாநில பொதுக்குழு உறுப்பினர் சங்கை கணேசன், தென்காசி மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி சேர்மக்கனி, நகராட்சி காங்கிரஸ் தலைவர்கள் செங்கோட்டை ராமர், புளியங்குடி பால்ராஜ், கடையநல்லூர் முகம்மது அபுதாஹீர் மற்றும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், சுரண்டை நகர்மன்ற உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.