குற்றாலத்தில் தீ விபத்து குறித்து அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு
1 min read
Minister Ramachandran’s inquiry into the fire accident at Courtalam
27/8/2023
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் குற்றாலநாதர் கோவில் தெற்கு பிரகாரம் பகுதியில் அமைக்கப் பட்டிருந்த தற்காலிக கடைகளில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் 40 கும் மேற்பட்ட கடைகள் சாம்பலானது. கடைகளில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் அருகில் இருந்த மரங்களும் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் ரூபாய் 2 கோடி மதிப்பி லான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
தீ விபத்து ஏற்பட்ட பகுதியை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் தங்களுக்கு நிவாரண உதவி அரசு வழங்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
குற்றாலநாதர் கோவில் தெற்கு பகுதி சுவர் பகுதியில் புகைப் படிந்துள்ளது. இதனை சுத்தம் செய்ய வேண்டும் என குற்றாலம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிகழ்ச்சியில்
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன், கோவில் உதவி ஆணையர் கண்ணதாசன், தென்காசி எம்பி தனுஷ் எம் குமார்,தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் ஈ.ராஜா எம்எல்ஏ, தென்காசி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.எம்.அழகு சுந்தரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டி ஆர் கிருஷ்ணராஜா, குற்றாலம் பேரூர் செயலாளர் குட்டி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சு.வேலுச்சாமி, ஒன்றிய பொருளாளர் இசக்கி பாண்டியன், குற்றாலம் சுரேஷ், சாம்பவர் வடகரை கோ.மாறன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.