ந்திரயான் 3 புதிய இந்தியாவின் அடையாளம்-பிரதமர் மோடி பேச்சு
1 min read
Ndrayan 3 Identity of New India- PM Modi speech
27.8.203
சந்திரயான் 3 புதிய இந்தியாவின் அடையாளம் என்று பிரதமர் மோடி பேசினார்.
மனதின் குரல்
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று 104-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
சந்திரயான்-3 மிஷன் வெற்றி மிக பிரமாண்டமானது. இது புதிய இந்தியாவின் அடையாளமாக மாறியுள்ளது. இந்தியாவின் சந்திராயன்3 மிஷன் பெண் சக்திக்கு நேரடி உதாரணம். இந்த பணியில், பல பெண் விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். இந்தியாவின் மகள்கள் இப்போது விண்வெளிக்கு கூட சவால் விடுகிறார்கள். தேசம் வளர்ச்சி அடைவதை இனி யாரால் தடுக்க முடியும்?
ஜி-20 மாநாடு
செப்டம்பர் மாதம் இந்தியாவின் திறனைக் காணப் போகிறது. ஜி-20 தலைவர்கள் உச்சிமாநாட்டிற்கு இந்தியா முழுமையாக தயாராக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 40 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பல உலக அமைப்புகளின் தலைவர்கள் டெல்லி வரவுள்ளனர்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.