நிலவின் வெப்பநிலையை கண்காணிக்கும் விக்ரம் லேண்டர் – இஸ்ரோ தகவல்
1 min read
Vikram Lander to Monitor Moon’s Temperature – ISRO Information
27.8.2023
நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கியுள்ளது. 14 நாட்களுக்கான ஆய்வு பணியை இஸ்ரோ ரோவருக்கு வழங்கியுள்ளது.
அதன்படி, ரோவர் நிலவின் மண்ணில் நகர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இதற்கிடையே, விக்ரம் லேண்டர் தரையிறங்கும்போது எடுத்த புகைப்படம், இறங்கிய பிறகு எடுத்த புகைப்படம், ரோவர் வெளியேறும் வீடியோ உள்ளிட்டவைகளை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.
வெப்பநிலை
இந்நிலையில், நிலவின் வெப்பநிலையை விக்ரம் லேண்டர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டரில் உள்ள 10 சென்சார் கருவிகள் மூலம் வெப்பநிலை ஆய்வு செய்யப்படுகிறது. நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையை விக்ரம் லேண்டர் ஆய்வு செய்கிறது. விக்ரம் லேண்டரில் பொருத்தப்பட்ட கருவி CHASTE நிலவின் மேற்பரப்பில் வெப்பநிலையை அளவிட்ட, முதல் தகவலை இஸ்ரோ பதிவு செய்துள்ளது.
நிலவின் மேற்பரப்பில் 10 சென்டி மீட்டர் வரை துளைக்கும் திறன் விக்ரம் லேண்டருக்கு உள்ளது.