தென்காசியில் பீடித்தொழிலாளர் சம்மேளன மாநில மாநாடு
1 min read
Tenkasi State Conference of Pedi Workers Federation
28.8.2023
தமிழ்நாடு பீடி தொழிலாளர் சம்மேளனத்தின் 11-வது மாநில மாநாடு தென்காசி அருகே உள்ள சக்தி நகரில் இருந்து பேரணியுடன் தொடங்கியது. மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பேரணியில் சி.ஐ.டி.யூ. மாநில தலைவருமான சவுந்தரராஜன், சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் திருச்செல்வன், பொருளாளர் பாப்பூ, சி.ஐ.டி.யூ. மாநில துணைத்தலைவர்கள் மகாலட்சுமி, செண்பகம், வரவேற்பு குழு தலைவர் முன்னாள் பேராசிரியர் சங்கரி, சம்மேளனத்தின் மாவட்ட நிர்வாகிகள் மகாவிஷ்ணு, குருசாமி, ஆரியமுல்லை, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் அயூப்கான், மாவட்ட செயலாளர் மணிகண்டன், பொருளாளர் தர்மராஜ் மற்றும் மாநில சம்மேளன உறுப்பினர்கள் பலர் பேரணியில் கலந்து கொண்டனர். பேரணி புதிய பஸ் நிலையம் முன்பு நிறைவடைந்தது. தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.